2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு
அதன்படி, தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
https://www.doenets.lk/examresults
குறித்த பரீட்சையில் மொத்தம் 281,810 விண்ணப்பதாரர்களில், 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதேநேரம், 111 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 22 வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

