கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதி உட்பட பல வீதிகளில் திண்மக்கழிவுகள் சீராக அகற்றப்படாததால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
பல வீதிகளில் திண்மக்கழிவுகள் குவிந்து காணப்படுகிறன. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும், சூழல் மாசுபடும் நிலையும் காணப்படுவதாகவும். திண்மக்கழிவுகளை பாராபட்சமின்றி சீராக சூழற்சி முறையில் அகற்ற கல்முனை மாநகரசபை ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.









