சட்ட அமலாக்கத்தைத்தாண்டி நேர்மை, ஒழுக்கநெறி மற்றும் பொதுப்பொறுப்புணர்வு ஆகியவற்தை வளர்க்கும் ,பண்பாட்டைஉருவாக்கும் நோக்கோடு, அகில இலங்கை இந்து சமய அறநெறிப்பாடசாலைகளில் இந்து கலாசார பண்பாட்டலுவலக்ள் அமைச்சின் வழிநடத்தலில் தேசிய நேர்மை வாரம் 2026 நிகழ்வுகள் நடைபெறுகின்றன
குறித்த நிகழ்வானது நேற்று ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு கலைவாணி அறநெறிப்பாடசாலையில் நடைபெற்றது.
அறநெறிப்பாடசாலை அதிபர் திருமதி v. கிருபைராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாண்டிருப்பு மகாவித்தியாலய அதிபர் கே.அருண்குமார் பிரதம அதிதியாகவும் , திரு.என்.சுதர்சள் பாண்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் , திரௌபதை அம்மன் ஆலய தலைவர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்
இந் நிகழ்வில் மாணவர்கள் ஒழுக்கம், பாண்பாடு ,விழுமியம் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு கவிதை, கதை ,உரை, நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளைச் செய்தனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.






