சவுதி–துருக்கி–எகிப்து அமைச்சர்கள் பாகிஸ்தானில் அவசர சந்திப்பு – மத்திய கிழக்கு போருக்கு தீர்வா?


பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது.


அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்து சர்வதேச வர்த்தகத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், இந்த நான்கு நாடுகள் முக்கிய மத்தியஸ்த நாடுகள் என திகழ்கின்றன. குறிப்பாக, அமெரிக்கா முன்மொழிந்துள்ள 15 அம்ச அமைதித் திட்டம் குறித்து ஈரானுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுப்பது பற்றி விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம், கப்பல் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு சிக்கல்கள் அதிகரித்துள்ள நேரத்தில் நடைபெறும் இஸ்லாமாபாத் ஆலோசனை, மத்திய கிழக்கு போரை அமைதியுடன் முடிவுக்கு கொண்டு வரக்கூடிய முக்கியமான ராஜதந்திர முன்னேற்றமாக சர்வதேச வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.