கல்முனை வள்ளுவம் அமைப்பினூடாக பொருளாதார ரீதியாக சிக்கலுறும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

2024 A/l batch, 2025 A/l batch மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கல்முனை வள்ளுவம் அமைப்பு பொருளாதார ரீதியாக சிக்கலுறும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். கடந்த ஒரு வருட காலமாக பல கல்வி உதவிகளை வழங்கி வந்துள்ளது.

வள்ளுவம் ஈராண்டு தொடக்கவிழாவை முன்னுட்டு பல நலன்விரும்பிகளினதும், வள்ளுவம் அங்கத்துவரினதும் நிதி பங்களிப்புடன் பொருளாதார ரீதியாக சிக்கலுற்றிருக்கும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வு 28.03.2026 இன்று பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது

இந்நிகழ்விற்கு திரு.த. அமிர்தலிங்கம் (வதிவிட பொறியலாளர்) , திரு.க. தியாகராஜா (சது /வேப்பையடி மகா வித்தியாலய அதிபர்) ,செ. திவாகரன்( கமு/ சது வளாத்தாப்பட்டி அ.த. க பாடசாலை ஆசிரியர் ) ,திருமதி. நிளந்தினி ரவிச்சந்திரன் (கமு/ பாண்டிருப்பு மகா வித்தியாலம் பிரதி அதிபர்), திரு.ச. குமணரோஜன் (உதவி பொறியியலாளர் ) அதிதிகளாகளாகவும், வள்ளுவம் அமைப்பின் அங்கத்தவர்கள் உட்பட பலர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்..