- நவநீதன் –
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழில் சந்தை 2026.07.15ம் திகதி “பிரதேச கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜீந்திரன் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.S. நிரூபா , மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ந. அருளானந்தம் அவர்களின் நெறிப்படுத்தலில் தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்கள் (HNB Life, Amana Taka Full life, celince life, metropolitan college Green plantation, Pj Agro Farming, Bl ommer investment மற்றும் Airforce, Naita அரச நிறுவனங்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதேசத்தில் காணப்படும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தங்களிடம் காணப்படும் தொழில் வாய்ப்புகள் பற்றி அறிவுரை வழங்கினார்கள்.
இந் நிகழ்வினை நாவிதன்வெளி பிரதேச மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். பாஸில் அவர்கள் ஒழுங்கு ஒழுங்குபடுத்தினார் கலந்து கொண்டவர்களுக்கு நேர்முகப்பரீட்சையும் நடைபெற்றது.




















