களத்தில் இருந்து சந்திரமோகன்

கிழக்கு மாகாண சபையின்  சுகாதாரப் பிரிவில் கடமையாற்றும் Dr.அழகையா லதாகரன்  ( சமுதாய விசேட வைத்திய நிபுணர் ) அவர்களின் சிறந்த ஆளுமையின் கீழ் வருடந்தோறும் நடந்து வரும் விசேட வைத்திய முகாம் இம்முறையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இம் வைத்திய முகாமில் பல கோண வடிவில் மக்களுக்கான மனிதாபிமான சேவை  நடைபெறுவதை காணக்கூடியதாகவுள்ளது.

தினமும் வைத்திய சேவை,
மற்றும் 24மணி நேர அவசர சிகிச்சை இவற்றிற்கும் மேலாக தினமும் காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கான  மூலிகை தேனீருடன் சிற்றுண்டி ஆகாரம் என சேவையுடன் ,
பக்தர்களுக்கான பாதயாத்திரை நடைமுறை விளக்கம் காலையில் ஒலிப்பதிவாக ஒலிபரப்பப்படுவதும், அவ் விளக்கம் பத்தர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பதும்
சிறப்பம்சமாக அமைந்துள்ளது.