பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுப்பு
பாறுக் ஷிஹான்
பாடசாலைகள் மீள ஆரம்பித்தலை முன்னிட்டு இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆராயப்பட்டன.
சுகாதார வைத்திய அதிகாரிவைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனைக்குட்படுத்தபட்டதுஇஇவ் செயற்பாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்ளும் பங்கேற்றனர்.இதில் நுளம்பு பெருக்கத்துக்கு சாதுவான இடங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன்இஅதனை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
டெங்கு நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெறுவோம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழல் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






