நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் அண்மையில் பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் அம்பாறை மாவட்ட செயலகம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துடன் இணைந்து கலைஞர் சுவதம் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாவிதன்வெளியில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு இதன் போது விருது வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்கள்.

நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஏ.எல்.எம்.ஷினாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலைஞர்களுக்கான விருதினை வழங்கி வைத்தார். நிகழ்வில்  மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்ஸான், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திலகராணி கிருபைராஜா உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

2025ம்ஆண்டு கலைஞர் சுவதம் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட  நாட்டுக்கூத்து கலைஞர் மிக்கேல் பெர்னாண்டோ, இலக்கியத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ரெட்ணம் சுவாகர், பாரம்பரிய பொல்லடிக்கலை பங்களிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட மீரா சாஹிபு றஹூப் ஆகியோர் இங்கு “சுவதம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.