மாணவர்களுக்கு கவிதை பயிற்சிப்பட்டறை பைந்தமிழ்குமரன் அவர்களால் நடாத்தப்பட்டது
சேனைக்குடியிருப்பு கணேஷா மகாவித்தியாலத்தில் மாணவர்களின் ஆக்க இலக்கிய மேம்பாட்டையும், வாசிப்பையும், இலக்கிய ஆர்வத்தையும் வளர்க்கும்வகையிலும், தமிழ் மொழித்தின எழுத்தாக்கப்போட்டிகளில் கலந்துகொண்டு ,தரமான படைப்புக்களை எழுதக்கூடியவாறு மாணவர்களை வளப்படுத்தும்வகையில் கவிதை தொடர்பான பயிற்றிப்பட்டறை, கவிஞரும், எழுத்தாளரும், திறனாய்வாளருமான ஓய்வுநிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் பைந்தமிழ்குமரன் ஜெ.டேவிட் அவர்களால் நடாத்தப்பட்டது.
பாடசாலை அதிபர், தமிழ் மொழிப்பாட ஆசிரியர்களது வேண்டுகொளின்படி 22.12.2025 இன்று இப்பயிற்றசிப்பட்டறை க.பொ.த சாதாரண தரம் ,க.பொ.உ தர வகுப்பு மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றது.
இதில் மாணவர்களுக்கு கவிதையை வாசித்தல், சுவைத்தல், எழுதுதல் எனும் திறன்களை வளப்படுத்தும் வகையிலும், திறனாய்வு செய்யும் ஆற்றலை புடம் போடும் வகையிலும் இந்த பயிற்சிப்பட்டறை பயனுள்ள வகையில் அமைந்திருந்தது.
சிறுகதை பயிற்சிப்பட்டறையையும் நடாத்ததுவதற்கு திரு பைந்தமிழ் குமரன் அவர்களிடம் பாடசாலை நிருவாகத்தால் கோரிக்கை முன்வைக்கப்ட்டிருந்தது




