சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி உதவியில். மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அனர்த்த நிலைமையின் போது. தமது கற்றல் உபகரணங்களை இழந்த மற்றும், சேதமடைந்த கல்முனை பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள். உதவும்பொற்கரங்ள் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான சமூக சேவகர் . விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி உதவியில் (13) பாண்டிருப்பில் உள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் வைத்து வழங்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களே இவ்வாறு வழகப்பட்டது. உதவும் பொற்கரங்கள் அமைப்பின். தாயக இணைப்பாளர் என். சௌவியதாசன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற. உதவி கல்வி பணிப்பாளர் கண. வரதராஜன், முன்னாள் சர்வோதய மாவட்ட இணைப்பாளர் திருமதி நித்திய கைலேஷ்வரி. பாண்டிருப்பு மாதர் கிராம விருத்திச் சங்கத்தின் தலைவி. தமயந்தி ,செயலாளர் மனோரஞ்சனி. மற்றும் பெரிய நீலாவனை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பை சார்ந்த இளைஞர்கள். மாணவர்களின் பெற்றோர்கள் என. பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளில் சில பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. உதவும் பொற்கரங்கள். அமைப்பின் நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக பல்வேறு கிராமங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதற்கான ஒத்துழைப்பை பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர்கள் வழங்கி வருகின்றனர்.








