சிட்னி நகரில் உள்ள பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இளையவரான நவீட் அக்ரம் (Naveed Akram), ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பின் கவனத்திற்கு வந்துள்ளார்.

சிட்னியை தளமாகக் கொண்ட  IS பயங்கரவாதக் குழுவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் நடந்த இடத்தில் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தில், இரண்டு IS கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.