மலையக மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மும்முரம்!

நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தத்தால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். மலையக மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்களிலிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாகவும், நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. பாண்டிருப்பு மக்கள் சார்பாக பாண்டியூரான் குழுமமும் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை , இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் தங்கள் கிராமங்களில் உலருணவுப்பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

கீழ் உள்ள இடங்களில் நீங்களும் எமது நாட்டு மக்களுக்காக நிவாரணப் பொருட்களை வழங்கலாம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பின்வரும் இடங்களில் நிவாரண பொதிகள் சேர்க்கப்படுகிறது

பாண்டிருப்பு மாரியம்மன் ஆலயம் முன்பாக

கல்முனை அம்பலத்தடி ஆலயம் முன்பாக

பெரிய நீலாவனை பிரதான வீதி இளநீர் கடைக்கு அருகாமையில்

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்பாக

நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்திற்கு முன்பாக

மேலும் கொடுக்க விரும்பும் நபர்கள்

0776082418
0774124338
76 007 0099
77 723 6954

சேகரிக்கப்படும் இப் பொருட்கள் யாவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக மலையக மக்களுக்கு நேரடியாக வழங்கி வைக்கப்படும். நிவாரணப்பொருட்களை வழங்குவோர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் சேகரிக்க்படும் நிலையத்திலோ பிரதேச செயலக முன்பாகவோ நேரடியாக வழங்கலாம் மேலதிக தகவல்களுக்கு உங்கள் கிராம சேவை உத்தியோகத்தருடனும் தொடர்பு கொள்ளலாம். எதிர்வரும் 4 ஆம் திகதி மாலைவரை சேகரிப்பு பணிகள் இடம் பெறும்.