மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம்
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சித்திரப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது.
இப்பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் அப்துல் நெளபர் முஹம்மட் சிமர் என்ற மாணவன் சித்திரம் வரைதல் (Object Drawing Pastel) பிரிவில் முதலாம்(1st Place) இடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த சாதனையை அடைவதற்கு உறுதுணையாக இருந்து ஆலோசனைகளை வழங்கிய கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான், பிரதி அதிபர்களான எம்.பி.அஹமட் ராஜி, ஏ.ஆர்.என்.மன்பூசா, உதவி அதிபர்களான எம்.ஐ.சர்மலா, எம். எஸ். முஹிஸா சர்மூன், எஸ்.நஹீதா, ஏ.சி.எம்.றக்ஸான் ஆகியோருக்கும் பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவனுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கிய சித்திரப் பாட ஆசிரியர் ஏ.ஏ.முஸ்அப் றஸீன் ஆகியோருக்கும் பாடசாலையின் கல்விச் சமூகம் தமது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இம் மாணவன் மருதமுனை பிறான்ஸ் சிற்றியில் வசித்து வரும் முஹம்மத் அபூபக்கர் அப்துல் நெளபர், முபாறக் பெளசுல் மஸீனா ஆகியோரின் மூத்த புதல்வராவார் என்பதும்குறிப்பிடத்தக்கது. போட்டியில் பங்குபற்ற ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
