ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) தலைவர் பத்மநபா அவர்களின் 74 வது அகவை தினமான கடந்த 19 ஆம் திகதி அக்கட்சியின் முக்கியஸ்த்தர்களின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் உள்ள little friends pre school மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வு காரைதீவு முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.நேசராசா தலைமையில் நடைபெற்றது பத்மநபா அறிவாற்றல் கழகத்தின் ஸ்தாபக தலைவர் ஜோதி ( சோலையூரான்) மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களான பர்ணான்டோ சிராப் நகுலன் பாஸ்கரன் சோபன் வரதன் ஆகியோரும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்னர்.

இந் நிகழ்வு தோழர் பத்மநபா சமூக சேவை ஒன்றியத்தின் ஸ்தாபத்தலைவர் லவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கான அனுசரணையை அமைப்பின்புலம்பெயர் உறவுகள் வழங்கியிருந்தார்கள்.