திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் #ஆனந்த_விஜயபால அவர்கள் புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது பலத்த பொலிஸ்பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு பொதுமக்கள் மற்றும் பௌத்தபிக்குகள் கலந்து கொண்டு இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
