இன்று நாட்டில் 1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம் !

( வி.ரி.சகாதேவராஜா)

நாட்டில்  கடந்த வருடத்தில் மருத்துவ பட்டம் பெற்ற 1190 புதிய வைத்தியர்களுக்கான ஒரு வருட உள்ளகப் பயிற்சி இன்று (10) திங்கட்கிழமை ஆரம்பமானது .

நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் குறித்த வைத்தியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் .

இன்று திங்கட்கிழமை இவர்களுக்கான உள்ளக பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வுகள் குறித்த வைத்தியசாலைகளில்பரவலாக  நடைபெற்றன.

கொழும்பு இலங்கை தேசிய வைத்தியசாலையில் இன்று உள்ளகப் பயிற்சி மேற்கொள்வதற்காக   அதிகூடிய 172 மருத்துவர்கள் சமூகளித்திருந்தனர்.

இவர்களுக்கான பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வு பதிவுகளுடன் இன்று காலை நடைபெற்றன.  அவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர்.

You missed