( திருக்கோவிலிலிருந்து வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற  திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நிருமாணிக்கப்பட்டுவரும் நவதள இராஜகோபுரம் ராஜ கம்பீரமாக குடமுழுக்கு காணும் காலம் வெகு தூரத்தில் இல்லை .இப் புனித தெய்வீக பணிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

இவ்வாறு திருக்கோவில்  சித்திர வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் நேற்று இராஜ கோபுரத்தின் 9 வது தளத்தில் ஏறி நின்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் ஒன்பது தளங்களுடன் கூடிய இராஜகோபுரம் அமைந்த ஒரே ஒரு ஆலயமாக இவ்வாலயம் திகழ்கிறது .

அவருடன் உபதலைவர் கே.சபாரத்தினம் ,பொருளாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி, கணக்குப்பிள்ளை இ.லோகிதராஜா, திருப்பணி குழுத்தலைவர் கே.பாஸ்கரன், சமய ஆர்வலர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் நின்றிருந்தனர்.

 அங்கே ராஜ கோபுர நிதிப் பங்களிப்பு செய்தோர் பற்றி தலைவர் சுரேஸ் மேலும் கூறுகையில்..

இராஜகோபுரத்தின் அடித்தளம் ஆலய நிதி மூலம் ஆனந்தன் போடியார்  தலைமையில் நிறுவப்பட்டது.

வியாழமட்டம் பொதுமக்கள் பங்களிப்புடன் திருப்பணிச்சபை ஊடாக நிறுவப்பட்டது.

முதலாம் தளம் அ. உருத்திரகுணசீலன்( தம்பிலுவில் )

முதலாம் தளத்தின்  மேல் பிளேட் கவி. கோடீஸ்வரன் அரச நிதியிலிருந்து கட்டப்பட்டது.

இரண்டாம் தளம்  சு. சசிகுமார் (திருக்கோவில்) 

மூன்றாம் தளம் மகாதேவா குடும்பம் (தம்பிலுவில் )

நான்காம் ஐந்தாம் தளம் இந்தியா  ஆந்திரா  சுவாமி ராமானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது.

ஆறாம் ஏழாம் தளங்கள் ஆலய நிதியில் இருந்து கட்டப்பட்டது.

எட்டாம் தளம் ராஜதுரை போடியார் ( திருக்கோவில் )

ஒன்பதாம் தளம் ப. ஜேசுதாஸ்  (திருக்கோவில் )

ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் இந்த ஒன்பது தளங்களும் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றது .

மேலும் இதற்கு பொம்மை மற்றும் வர்ணப் பூச்சு வேலைகளுக்கு பக்தர்கள் உதவி செய்ய முன் வந்து கொண்டிருக்கின்றார்கள். 

இதேவேளை இரண்டு மணிக் கோபுரங்களை அமைக்க அதே இந்தியா ஆந்திரா சுவாமி ராமானந்த சரஸ்வதி முன்வந்துள்ளார்.

பெரும்பாலும் 2027-28 களில் இராஜகோபுரம் பூரணமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது .

எமது பிரதான ஆலயம் 2018 இல் மகா கும்பாபிஷேகம் கண்டது. எனவே 2030 இல் அடுத்த கும்பாபிஷேகம் காண வேண்டும் .

எல்லாம் வல்ல முருகப்பெருமான் என்ன திகதியன்று கோபுரம் மற்றும் ஆலய கும்பாபிஷேகம் காண வேண்டும் என நினைக்கிறாரோ அதற்கமைய அருள் பாலிப்பார் என நம்புகிறோம். என்றார்.

ஆலயபிரதமகுரு விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலய குரு சிவஸ்ரீ நீதி.அங்குசநாதக் குருக்கள் முன்னிலையில் ஆலயபரிபாலனசபைத்

தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் நெறிப்படுத்தலில் நீண்ட நாட்கள் தடைபட்டிருந்த இராஜ கோபுர நிருமாண பணிகள் மிகவும் ஜரூராக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You missed