திருக்கோவில் நவதள இராஜகோபுர நிர்மாணத்தின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது!
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுர நவதளத்தின் இறுதித்தள வேலைப்பாடுகள் மற்றும் மணிக்கோபுர வேலைப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஆலயபிரதமகுரு விபுலமணி
சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலயபரிபாலனசபைத்
தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் நெறிப்படுத்தலில் நீண்ட நாட்கள் தடைபட்ட இராஜ கோபுர நிருமாண பணிகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் விரைவில் வெளிச்சிற்ப வேலைப்பாடுகளும் நடைபெற இருக்கின்றன .
எனவே முருக நிதி அளிக்க விருப்பும் அடியார்கள் கட்டட நிர்மாண குழு ,ஆலய நிர்வாக குழுவினை தொடர்பு கொள்ளலாம் எனவும்
மேலதிக தகவல்களுக்கு
நிர்மாண குழுத்தலைவர் பாஸ்கரன் -0772354679 ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



