கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 மாகாண கண்காட்சியானது எதிர்வரும் 9, 10 திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெண்கள் பிரிவில் விமர்சையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாகாண பணிப்பாளர் திரு. கே .இளங்குமுதன் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜனாப்.Z.A.M.பைசால் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் பிரதம அதிதியாகவும் கிராம அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்கள் கௌரவ அதீதியாகவும் கலந்து கொள்ளும் இந் நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 42 மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. அத்துடன் மட்டுமல்லாமல் விற்பனையும் நடைபெறும்.
கண்காட்சியானது முற்று முழுதாக இலவசமாக சகலருக்கும் காண்பிக்கப்பட இருக்கின்றது.




