கல்முனை  விகாரையில் களவாடப்பட்ட  மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை

பாறுக் ஷிஹான்

மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இத்திருட்டு சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய தற்போது அவ்விகாரையில் சம்பவம் இடம்பெற்ற கட்டடத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மேலதிக விசாரணை மேற்கொள்வதற்காக இன்று  தடயவியல் பொலிஸாரின் உதவியும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர வழிகாட்டலில்   அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல ஆலோசனைக்கமைய    அம்பாறை மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமார் நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம் இப்னு அன்சார் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.