நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவின் மத்திய முகாம் -05/06 கிராம சேவகர்கள் பிரிவினை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளினை பராமரிக்கும் நபர்களை வலுப்படுத்துவதற்காக விழிப்புணர் பயிற்சிநெறி 01.11.2025 நடைபெற்றது.
பிரதேச செயலாளர் சஜிந்ரன் ராகுலநாயகியின் ஆலோசனையின் கீழும் உதவி பிரதேச செயலாளர் நிரூபாவின் வழிகாட்டலின்படியும் தொற்றா நோய் தொடர்பாக வளவாளராக வைத்தியர் M.I.M.M.S.இர்ஸாட் தொற்றா நேய்ப்பிரிவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கல்முனை. அத்துடன் உள ஆற்றுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருடள் ஒழிப்பு தொடர்பாக வளவாளராக M.M.G.B.M. றஷாட் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர், மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நலிவுற்ற மக்களுக்காக வழங்கப்படும் சேவைகள் தொடர்பான வளவாளராக K. சிவகுமார் மாவட்ட உத்தியோகத்தர், அம்பாரை என்பவரும் வளவாளராக கலந்து கொண்டதுடன் பிரதோச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் குரூஸ் குணரெட்ணம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான I.L. ரியாஸ் , I.L.ஜெஸ்ரா மற்றும் M.கமலினி போன்றவர்களும் கிராம உத்தியோகத்தர்கள் T.கேந்துஜன் மற்றும் வசீமா போன்றவர்களும் இச்செயலமர்வில் கலந்து கொண்டனர்.











