25 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்!

25 வருடகால அரச சேவையில் இருந்து கடந்த 23 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம் . இவருக்கான பிரியாவிடை நிகழ்வும் ,கௌரவிப்பும் சக ஊழியர்களால் ஓழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையிலும், கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் ஓய்வு பெறும்போது சேவையாற்றியிருந்தார்.

கல்முனையைச் சேர்ந்த இவர் ஆரம்ப கல்வியை கல்முனை விவேகானந்தா வித்தியாலயத்திலும், தரம் ஆறு முதல் க.பொ. சாதாரண தரம் வரை யாழ் கொக்குவில் இந்து மகளிர் கல்லூரியிலும், க.பொ.தர உயரதர கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலும் மேற்கொண்டு, சுவாமி விபுலானந்தா கல்லூரியில் இசைத்துறையில் டிப்லோமாவை பூர்த்தி செய்திருந்தார்.

பின்னர் தனது முதலாவது அரச பணிக்கான நியமனத்தை 1991 ஆம் ஆண்டு பெற்று பெற்று அம்பாறை கச்சேரியில் சேவையை ஆரம்பித்தார். 2002 கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகத்தில் அரச பணியினை ஆரம்பித்து பின்னர், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் நிருவாக உத்தியோத்தராகவும் ,கல்முனை ஆதார வைத்தியசாலையில் பதில் கடமையையும் செய்து 23.10.2025 அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

2022 ஆம் ஆண்டு சூப்பரா போட்டிப்பரீட்சையில் விஷேட தேர்ச்சி பெற்றிருந்தார்.