சித்த மருத்துவர்கள் பயிற்சியை நிறைவு செய்து அரச வேலையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மருத்துவர்களின் சங்கம் பாரிசவாதம் பற்றி விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் வெளியிட்ட கட்டுரை
2021ஆம் ஆண்டின் உலக சுகாதார ஸ்தாபன தரவுகளின்படி, இலங்கையில் ஒவ்வொரு 1 இலட்சம் மக்களில் 113 பெண்களும் 96 ஆண்களும் — மொத்தமாக 209 பேர் — ஆண்டுதோறும் மூளைப் பக்கவாதம் (Stroke) காரணமாக உயிரிழக்கின்றனர். இது ஒரு மிகக் கவலைக்கிடமான நிலைமையாகும்.
இவ்வளவு பெரும் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருப்பது, ஆங்கில மருத்துவமனையை உடனடியாக நாடாமையே என அக்டோபர் 29 மூளைப்பக்கவாதம் குறித்த விழிப்புணர்வுச் செய்தியில் அரச வேலையற்ற சித்த மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
ஆங்கில சிகிச்சை பெற்ற பின்னரர் சித்தமருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாததாலும் பாதிப்புகள் நீடிப்பதாக சங்கம் தெரிவிக்கிறது.
சித்த மருத்துவம் மூளைப் பக்கவாதம் போன்ற நரம்பு சார்ந்த நோய்களிலிருந்தான மீளுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கில சிகிச்சை மூலம் உயிர்க்காப்பு உறுதியாக்கப்பட்ட பின்னர், சித்த சிகிச்சை மூலம் உடல் இயக்கம், நரம்பு ஒத்துழைப்பு மற்றும் பேசும் திறன் போன்றவை மேம்படுத்தப்பட முடிகிறது. இதற்கு பல மருத்துவமனைகளில் வெற்றிகரமான நோயாளர் பதிவுகள் உள்ளன.
மூளைப் பக்கவாதம் போன்ற நோய்நிலைமைகளில் ஆங்கிலமும் சித்த மருத்துவமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களின் உயிரும் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்பது எங்கள் கருத்தாகும். கட்டாயமாக ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். பின்னர், 14 முதல் 60 நாட்களுக்குள் சித்த மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு சித்த மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தால், அவர்கள் முழுமையாக குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், சித்த மருத்துவத்தின் ஆழ்ந்த திறனை அறியாததாலும், இன்று பலர் படுக்கையில் கிடக்கிறார்கள் — கைகள், கால்கள் இயங்காமல், குடும்பத்தின் பாரமாக மாறி உள்ளனர். செயலிழந்த அங்கங்களுக்கு மீண்டும் உயிரூட்டும் சக்தி இதில் உள்ளது.
இப்படி வாழ்க்கை போராட்டத்தில் தோல்வி அடைந்தவர்களுக்காக, சித்த மருத்துவத்தின் பக்கம் திரும்புவது ஒரு நம்பிக்கை ஒளியாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு நோயாளிக்கும், “இன்னும் நம்பிக்கை இருக்கிறது” என்ற உண்மைச் செய்தியை சொல்ல வேண்டியது எமது பொறுப்பு.
விழிப்புணர்வு இல்லாமையால் படுக்கையில் கிடக்கும் அந்த நபர், ஒருகாலத்தில் குடும்பத்திற்காக உழைத்த மனிதர் என்பதை நாம் மறக்கக் கூடாது. அவர்களுக்கான சிறந்த அனுதாபம் — நம்மால் இயன்ற அளவு விழிப்புணர்வு பரப்புவது தான்.
இதில் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால் 14 வது நாளில் சித்தமருத்துவ சிகிச்சைகளை ஆரம்பித்தல் 60 வது நாளில் ஆரம்பிப்பதிலும் கூடியளவு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே கட்டாய ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை பூரணமாக பெற்றபின்னர் 20 வது நாளுக்கிடையிலாவது அரச சித்தமருத்துவமனையை நாடவேண்டும். கட்டாயமாக ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். பின்னர், 14 முதல் 60 நாட்களுக்குள் சித்த மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு சித்த மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தால், அவர்கள் முழுமையாக குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், சித்த மருத்துவத்தின் ஆழ்ந்த திறனை அறியாததாலும், இன்று பலர் படுக்கையில் கிடக்கிறார்கள் — கைகள், கால்கள் இயங்காமல், குடும்பத்தின் பாரமாக மாறி உள்ளனர். செயலிழந்த அங்கங்களுக்கு மீண்டும் உயிரூட்டும் சக்தி இதில் உள்ளது.
இப்படி வாழ்க்கை போராட்டத்தில் தோல்வி அடைந்தவர்களுக்காக, சித்த மருத்துவத்தின் பக்கம் திரும்புவது ஒரு நம்பிக்கை ஒளியாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு நோயாளிக்கும், “இன்னும் நம்பிக்கை இருக்கிறது” என்ற உண்மைச் செய்தியை சொல்ல வேண்டியது எமது பொறுப்பு.
விழிப்புணர்வு இல்லாமையால் படுக்கையில் கிடக்கும் அந்த நபர், ஒருகாலத்தில் குடும்பத்திற்காக உழைத்த மனிதர் என்பதை நாம் மறக்கக் கூடாது. அவர்களுக்கான சிறந்த அனுதாபம் — நம்மால் இயன்ற அளவு விழிப்புணர்வு பரப்புவது தான்.
நவீன ஆய்வுகள் சித்த மருந்துகளில் காணப்படும் மூலிகைகள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் neuroprotective, anti-oxidant, anti-inflammatory செயல்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை நிரூபித்துள்ளன என வேலையற்ற சித்த மருத்துவர் சங்கத்தினர் அக்டோபர் 29 மூளைப்பக்கவாதம் குறித்த விழிப்புணர்வுச் செய்தியில் தெரிவித்துள்ளனர்
