மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள், இன்று (29) மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு (தேசிய பாடசாலை) கள விஜயம் மேற்கொண்டார்.

பாடசாலையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் குறித்து ஆராய்வதே இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

பாடசாலை சமூகத்தினரால் வரவேற்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இதன் போது, பாடசாலையின் வளப் பற்றாக்குறைகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விசார் தேவைகள் தொடர்பில் விரிவாகக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, பாடசாலையில் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள புதிய கேட்போர் கூடத்திற்கான இடத்தினையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின் போது, களுதாவளை பிரதேச சபை உறுப்பினர்கள் சலாக்கியராஜ் அவர்களும், திருமதி துவேனிகா ருக்மாந்தன் அவர்களும் உடனிருந்தனர்.

பாடசாலையின் தேவைகளை விரைவில் தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.