27 ஆம் திகதி சூரசம்ஹாரம்!
( வி.ரி. சகாதேவராஜா)
இந்துக்களின் கந்த சஷ்டி விரதம் (22) புதன்கிழமை ஆரம்பமாகியது
தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து ஆறாம் நாளாகிய 27 ஆம் திகதி திங்கட்கிழமை சூரசம்ஹாரம் இடம் பெறும். மறுநாள் 28 ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று பாரணை திருக்கல்யாணம் நடைபெறும்.
வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் வழமைபோல் இடம் பெறுகிறது
ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும் ஆலயகுரு சிவசிறி அங்குசநாதக்குருக்கள் முன்னிலையில் விரதம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
கந்தசஷ்டி விரதம் 27 ஆம் தேதி சூர சம்ஹாரத்துடனும் மறுநாள் 28 ஆம் தேதி திருக்கல்யாணத்துடனும் நிறைவு பெறும்
வழமைக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் விரதத்தினை இம்முறை அனுஷ்டிக்கின்றனர்.
இவ்வருடம் கந்தசஷ்டி விரதத்திற்கான சஷ்டித்திதி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 03.20 க்குகூடி மறுநாள் 27 திங்கட்கிழமை ஆம் தேதி பின்னிரவு 04.33 மணிக்கு கலைகிறது. விரதாதிகள் 28 ஆம் திகதி தமது விரதத்தை பாரணையுடன் நிறைவு செய்து கொள்ளலாம் என்று பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தெரிவித்தார்.
