உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வு 2025
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் G.சுகுணன் அவர்களின் தலைமையில் 25.09.2025 வியாழக்கிழமை உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பான நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வில் தலைமயுரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் G. சுகுணன் அவர்கள் மருந்தாளர்களுக்கான வாழ்த்துகளை தெரிவித்ததுடன், வைத்தியசாலையின் பிரதான மருந்தாளர் செல்வி.P.சுதர்ஜினி மற்றும் மருந்தாளர்களின் சிறப்பான சேவை பற்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும் நிகழ்வில் வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் ரொஷாந்த், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீன், வைத்தியசாலையின் கணக்காளர் திரு. M . கேந்திர மூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் வைத்தியசாலையில் சுற்றாடலை மெருகூட்டுவதற்காக ரூபாய் 10000/- பெறுமதி மிக்க பூ கன்றுகள் பிரதான மருந்தாளரால் வைத்தியசாலைக்கு பரிசளிக்கப்பட்டது.