கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் – 30.08.2025

கல்முனை பிராந்திய மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 30.08.2025 சனிக்கிழமை கனடாவில் இடம் பெறவுள்ளது. கல்முனை பிராந்திய இணையம் -கனடா அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள முதலாவது ஒன்று கூடல் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் கல்முனை பிராந்திய மக்கள் அதிகளவில் இவ் ஒன்று கூடலில் பங்கு பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாவது இந்த ஒன்று கூடல் சிறப்பாக இடம் பெறுவதுடன் வருடாந்தம் மேலும் மேலும் சிறப்பபுடன் அமையவும் கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் முயற்சிகள், நோக்கங்கள் வெற்றி பெறவும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்