நாளை (10) கோபாலரெத்தினத்தின் மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும்
( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் அறுபதாவது அகவை மணிவிழாவும் நூல் வெளியீடும் நாளை (10) ஞாயிற்றுக்கிழமை களுதாவளை கலாசார மண்டபத்தில் காலை ஒன்பது மணிக்கு நடைபெறவுள்ளது .
ஓய்வு நிலை இலங்கை நிர்வாக சேவை அதிகாரி கலாநிதி சி. அமலநாதன் தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்ன சேகர கலந்து சிறப்பிக்க இருக்கின்றார் .
சிறப்பதிதிகளாக கிழக்கு மாகாண பிரதமர் செயலாளர் என்.தலங்கம, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி ஜே. முரளிதரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, விவசாய மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் க. மகேசன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
மேலும் கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், முன்னாள் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் .
விழாவில் மணிவிழா சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்படும்.
சிறப்பு மலருக்கான ஆய்வுரைகளை கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வேலுப்பிள்ளை குணரத்தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத் தலைவர் க.அனிரன் ஆகியோர் நிகழ்த்துவார்கள்.
விழாவிற்கு ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாண மணிவிழா ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.