மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் இம் மாதத்திற்கான ஆவணி மாத பௌர்ணமி கலை விழா நேற்று 08.08.2025 வெள்ளிக்கிழமை பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக சிவ ஸ்ரீ வசந்த டிமலேஸ்வரன் ( சிவன் ஆலய பிரதம குரு) அவர்களும், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எஸ்.பார்த்தீபன் அவர்களும் மற்றும் அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண கலாசார திணைககள பணிப்பாளர் எஸ்.நவநீதன் அவர்களும் , சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜன், ,பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.வீரசிங்க, எழுத்தாளர் சிவ வரதராஜன் ,ஓய்வுநிலை அதிபர்களான வ.பிரபாகரன், கா.சந்திரலிங்கம் ,சமூக சேவகரும், கல்முனை சரவணாஸ் நகை மாளிகை உரிமையாளருமான க.பிரகலதன், ,பாண்டிருப்பு சிவன் ஆலய தலைவர் சி.விக்னேஸ்வரன் கலாசார உத்தியோகத்தர் திருமதி வி.நகுலநயகி , கலாசார உத்தியோகத்தர் பிரபாகரன் ஆகியோரும் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

புதிதாக கடமையேற்றுள்ள மாகாண கலாசார பணிப்பாளர் எஸ் .பார்த்தீபன் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற கலாசார உத்தியோகத்தர் பிரபாகரன் ஆகியோரும் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்ச்சி தொகுப்பை நிஜந்தன் மற்றும் கஜானா வழங்கியிருந்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி வி.நகுலநாயகி நன்றியுரை நிகழ்த்தினார்

பிரதேச கலைஞர்களுக்கு சிறந்த களமாக அமைந்த இந் நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றன.

புகைப்பட உதவி – செல்லத்துரை சுரேஸ்