கலாசார திணைக்களம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில்

பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் நாளை (08) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலைவிழா!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் இம் மாதத்திற்கான ஆவணி மாத பௌர்ணமி கலை விழா நாளை 08.08.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக சிவ ஸ்ரீ வசந்த டிமலேஸ்வரன் ( சிவன் ஆலய பிரதம குரு) அவர்களும், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எஸ்.பார்த்தீபன் அவர்களும் ,கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜன், மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஜனாப் ஏ.எல்.தௌபீக், எழுத்தாளர் வைத்தியர் எல்.புஸ்ப்பலதா ,பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.வீரசிங்க, எழுத்தாளர் சிவ வரதராஜன் ,சமூக சேவகரும், கல்முனை சரவணாஸ் நகை மாளிகை உரிமையாளருமான க.பிரகலதன் ,பாண்டிருப்பு சிவன் ஆலய தலைவர் சி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து சிறப்பிககவுள்ளனர்.

பிரதேச கலைஞர்களுக்கு சிறந்த களமாக அமையும் இந் நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.
இந் நிகழ்வுக்கு அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர்.