கிழக்கு மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் பட்டிருப்பு வலயம் முதலிடம் 

( வி.ரி. சகாதேவராஜா)

 நேற்று வெளியான 2025 ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண  சமூக விஞ்ஞான போட்டி முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்திலுள்ள  17 வலயங்களின் நிரல்படுத்தல்களின் படி பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தை பிடித்துள்ளது.

அவ் வலயம் எட்டு முதலிடத்தையும் ஆறு இரண்டாம் இடத்தையும் இரண்டு மூன்றாவது இடத்தையும் மொத்தமாக 16 இடங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.

அடுத்த படியாக 12 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் இரண்டாவது இடத்தினை பெற்று சாதித்துள்ளது.

 இதில் 5 முதலாம் இடங்களும் 3 இரண்டாம் இடங்களும் 4 மூன்றாம் இடங்களும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

கிழக்கில் இருக்கின்ற கல்வி வலயங்களில் பல வளப் பற்றாக்குறையுடன் இயங்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமானது   சகல வசதிகளுடனும் இயங்கும் கல்வி வலயங்களுடன் போட்டியிட்டு தொடர்ந்தும் தனது நிலையினை கிழக்கு மாகாணத்தில் தக்க வைத்திருப்பது என்பது பாராட்டத் தக்க ஒன்றேதான். 

09 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்தினை சம்மாந்துறை மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயங்கள் பெற்றுள்ளன. 12 வலயங்களிலே 12 வது வலயமாக திருகோணமலை வலயமுள்ளது.