காரைதீவு மாவடி ஆடி மகோற்சவத் திருவிழா 

(வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இம் மகோற்சவம் தினமும் பகல் இரவு திருவிழாவாக  வசந்தமண்டப பூஜையும் சுவாமி உள்வீதி வெளிவீதி வருதலும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்று வருகிறது. 

எதிர்வரும் 09ஆம் தேதி சமுத்திர தீர்த்தத்துடன் நிறைவடையவிருக்கிறது.