நேற்று மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் சிறப்பாக நடைபெற்ற” வாழும் வசந்தன்” நூல் வெளியீட்டு விழா 

( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் ” வாழும் வசந்தன்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நேற்று  (3) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த அவுஸ்திரேலியாவில் வாழும் தாந்தியான் சிதம்பரப்பிள்ளை தொகுத்துவழங்கிய “வாழும் வசந்தன் “

நூல்வெளியீட்டுவிழா  மகிழடித்தீவு  பிரதேச கலாச்சார மண்டபத்தில் நூலாசிரியர்  தலைமையில்  நடைபெற்றது.

அதிபர் வ.துசாந்தனின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் சு.சிவரெத்தினம், தேசிய கல்விநிறுவக தமிழ்பிரிவுப்பணிப்பாளர் கலாநிதி முருகு தயாநிதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்க.மோகனதாசன், செங்கதிரோன்  த.கோபாலகிருஸ்ணன்  கலந்துகொண்டனர்.

நூல் அறிமுகவுரையினை சின்னத்தம்பி குருபரன் நிகழ்த்தினார் .

மேலும் பிள்ளையார் வசந்தன், முசுற்றுவசந்தன், கூவாய் குயில் வசந்தன், அனுமார் வசந்தன் போன்ற வசந்தன்களும் ஆடல்நிகழ்வாக இடம்பெற்றது.

முதற்பிரதியினை முன்னாள் கொத்தணி அதிபர் ச.சந்திரசேகரம் பெற்றார் .

இந்நிகழ்வில் வசந்தன் கலைச்செம்மல் பாலிப்போடி நல்லதம்பி விசேட கௌரவத்தினை பெற்றுக் கொண்டார்.

சுபீட்சம் பிரதம ஆசிரியர் சுவிட்சர்லாந்தில் வாழும் வேதா என அழைக்கப்படும் தா.வேதநாயகத்தின் சகோதரரான ஓய்வு நிலை கூட்டுறவுச்சங்க பரிசோதகர் தா.சிதம்பரப்பிள்ளை ஏற்புரை வழங்கினார்.