பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்!


கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டம் பெரிய நிலாவணை திருப்பதியிலே இன்றைக்கு 626 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம மாமனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு எட்டுத்திக்கும் அருள் பாலித்து வரும் அன்னை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை 25 . 6 . 2025 புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடனும் திருக்கதவு திறத்தலுடனும் ஆரம்பமாக உள்ளது.


உற்சவ கால நிகழ்வுகளாக 25 / 6 /2025 புதன்கிழமை திருக்கதவு திறத்தலும் கொடியேற்றமும்.
27/6/2025 வெள்ளிக்கிழமை இரவு அம்மன் முத்துசப்ரத்தில் எழுந்தருளி ஊர்காவல் பண்ணல்.

02/07/ 2025 புதன்கிழமை கன்னி கால் வெட்டும் நிகழும். 04/07/ 2025 வெள்ளிக்கிழமை பால்பானை எடுக்கும் நிகழ்வும் .05/07/2025 சனிக்கிழமை பள்ளயமும் தீர்த்தமும் நடைபெறும்.

எனவே மெய்யாடியவர்கள் அம்மனுக்கு அபிஷேகப் பொருட்களையும் நேர்த்திக்கடன் பொருட்களையும் திருவிழாக் காலத்தில் சமர்பிதித்து அம்பாளின் அருள் பெற்றியுமாறு கேட்டுக் கொள்கிறார்கள் ஆலய அறங்காவல் சபையினர்.