பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!
பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிபிள்ளை அவர்களின் பூரண நிதிபங்களிப்பில் இம்முறை கமு விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று 27.05.2025 நடைபெற்றது.
அதிபர் திருமதி வாசுகி ஐங்கரன் தலமையில் இந் நிகழ்வில் சமூகசேவகர் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விசு கணபதிபிள்ளை அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.















