தேவையான வளங்கள், சிறந்த நிபுணத்துவம், பிரிவுகளுக்கான உள்ளக கட்டமைப்புகள் என பல சிறப்பம்சங்களை கல்முனை ஆதார வைத்தியசாலை தன்னகத்தே கொண்டுள்ளது.
எனினும் சில குறைபாடுகளை இனம்கண்ட இவ் வைத்தியசாலையின் இன்றைய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் வைத்தியசாலையின் சேவையாளர்களின் குறைகள், தேவைகள், கருத்துக்களை உள்வாங்கியதுடன் அதற்கமைய சில சீர்திருத்தங்களை செய்து வருகின்றார்.
பல முனைகளில் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருகின்ற வேளையில் வைத்தியசாலையின் வடிவமைப்பை மக்களின் மனதை கவரும் வகையில் மாற்றியமைப்பதும் இடம்பெறுகின்றது.
அந்த வகையில் நீண்ட நாட்களாக இங்கு நிலவும் பிரச்சனையாக வைத்தியசாலையின் சேவையாளர்கள், தேவை கருதி வரும் பொதுமக்களுக்கு இடையே ஏற்படும் தொடர்பாடல் முரண்பாடுகளை தீர்க்கவேண்டும் என்ற விடயத்தை இலக்காக கொண்டு இவ்விடயத்தில் ஓர் நற்பேற்றை ஈட்டும் வகையில் முதல் கட்டமாக சேவையாளர்களுக்கான ஒரு பயிற்சி பட்டறையை ஆரம்பிக்கவுள்ளார்.
இதுபற்றிய வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் நேரடியான காணொலி தகவல் இங்கே