கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு -2 நூல் அறிமுக நிகழ்வு இன்று மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ‘கிழக்கின் 100 சிறுகதைகள்- 2’ தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இன்று 2025.05.17 திகதி சிறப்பாக நடைபெற்றது .

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாலசுப்ரமணியம் காண்டீபன் ( மேனாள் குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர்), பேராசிரியர் எஸ்.குணபாலன் (வணிக முகாமைத்துவ பீடம் தென்கிழக்கு . வவுனியா பல்கலைக்கழகங்கள்) ,கலாநிதி வ.குணபாலசிங்கம் ( பீடாதிபதி – கலை கலாசார பீடம் கிழக்கு பல்கலைக்கழகம்),ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக எஸ் பிரகாஸ் (மாகாண பணிப்பாளர் – விளையாட்டுத் திணைக்களம்) ,கே.இளங்குமுதன் ( மாகாணப் பணிப்பாளர் கிராமிய அபிவிருத்தித் திணைக்களம்), ரி.ஜே.அதிசயராஜ் ( பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு) ,U.சிவராஜா ( மாகாண பணிப்பாளர் சமூக சேவைகள் திணைக்களம்) ஆகியோரும் ,விஷேட விருந்தினர்களாக உமா வரதராஜன் (சிரேஸ்ட எழுத்தாளர்), எம.அப்துல் ராசாக் மொழித்துறை விரிவுரையாளர் தெ.கி.பல்கலைக்கழகம் ,எஸ்.பார்த்தீபன் ( பிராந்திய உ.உ ஆணையாளர் மட்டக்களப்பு) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் இந்த நூலுருவாக்கத்திற்கு பிரதான பங்காற்றிய எழுத்தாளர் உமா வரதராஜன் மற்றும் மாகாண பணிப்பாளர் ச.நவநீதன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நூறு சிறுகதைகள் தொகுப்பு நூலின் முதல் பாகத்தின் வெளியீட்டு நிகழ்வு சில வருடங்களின் முன்னர் கல்முனையில் இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

You missed