மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த
பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் மாற்றுப் பரிந்துரை தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை ஆரம்ப
மாகவுள்ளது.


9 மாகாணங்களையும் உள்ளடக்கி 23 ஆம் திகதி முதல் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படும்.
அனைத்து பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர்
இறுதி முடிவு அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
தெரிவித்தது.


மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு குறிப்
பிட்டுள்ளது.மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை மின்சார சபையின்
முன்மொழிவு நேற்று முன்தினம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்
பிக்கப்பட்டது.


மின்சாரக் கட்டணத்தை 18.3 வீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார
சபையினால் முன்மொழியப்பட்டுள்ளது.