இன்று கதிர்காமத்தில் ஆடிவேல் விழாவிற்கான கன்னிக்கால் நடப்பட்டது!
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் மாங்கல்ய சடங்கு கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் நிகழ்வு இன்று (13) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
கதிர்காம கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
முகூர்த்தத்தில் குவளை நடும் நிகழ்வு இடம்பெற்றது. நேற்று முன்தினம் மாலை, பழங்கால முறைப்படி வெட்டப்பட்ட கம்புகள், மாணிக்க ஆற்றில் குளிப்பாட்டப்பட்டு, இரவு வள்ளி அம்பாள் திருக்கோவில் வைக்கப்பட்டது.
நேற்று காலை சுப முகூர்த்தத்தில் ஆலயத்தில் இருந்து அம்மக்களின் துணையுடன் திரு.ராலா மற்றும் கடைக்காரர் ராலா தலைமையில் கடமையாற்றும் குழுவினர் மகா தேவாலயத்திற்கு சென்றனர்.
கதிர்காமம் பெரிய ஆலயத்தின் கப்புறாளை நேற்று காலை சுப வேளையில் கன்னிக்கால் மற்றும் பெரேஹரா பொறுப்பு நிருவாகி, ராலா தலைமையில் கடமையாற்றும் குழுவினர் ஆலயத்திற்குச் சென்று பந்தக்கால் நட்டனர்.
அதன்படி, நேற்று முதல் 45 நாட்களுக்குப் பின்னர் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த அசல பெரஹெரா ஆடிவேல் திருவிழா ஜூன் 26ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 09ஆம் திகதி மஹா பெரஹெரா இடம்பெற்று, ஜூலை 10ஆம் திகதி காலை மாணிக்கங்கையில் நீர் வெட்டும் சடங்குடன் அதாவது தீர்த்தத்துடன் நிறைவடையும்.
உண்மையில் மேற்கூறப்பட்ட சடங்குகள் தினங்கள் பௌத்த பாரம்பரிய முறைப்படி தீர்மானிக்கப்பட்டது.
சைவ முறை அல்லது இந்துக் கோயில் என்ற ரீதியில் நோக்கினால் கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஆடி மாதத்தில் வரவேண்டும். ஆனால் இங்கு இவ் வருட உற்சவம் ஆனி மாதத்தில் வருகிறது.
எனவே ஆடிவேல் விழா என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா என்பது வினாவாகும். அப்படி எனின் ஆனிவேல் விழா என்று அழைக்கலாமா? என்பதும் சைவர்களின் அடுத்த வினாவாகும்.










