கல்முனை துரைவந்தியமேடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்!

கல்முனை துரைவந்தியமேடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ உத்தமாக மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

24.08.2026 அன்று மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் கிரியை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

25.08.2026 அன்று எண்ணெய் காப்பு மற்றும் விசேட அபிஷேகங்கள் நடைபெறும்.

26.08.2026 அன்று நித்திய பூஜைகள், விசேட அபிஷேகம், மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியன இடம்பெறுவதுடன், இரவு சுவாமி வீதி உலாவும் நடைபெறவுள்ளது.

இந்த ஆன்மீகப் பெருவிழாவில் அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.