முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ள திரு. எஸ்.சிறிதரன் அவர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர், இன்று (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் முன்னிலையில்
உத்தியோகபூர்வமாக தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிருவாக உத்தியோகத்தரை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட பிரிவுத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாகச் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்கான புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள திரு. சிறிதரன் அவர்களுக்கு, சுகாதாரத் துறைசார்ந்த பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.