பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம், பாண்டிருப்பு ஆலயத்தின் புதிய வாயிற் கோபுர திறப்பு விழா இன்று (2026.06.18) வியாழக்கிழமை மிகச் சிறப்பாகவும் பக்தி உணர்வுடன் கூடிய சூழலிலும் நடைபெற்றது.

காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரையான சுப நேரத்தில் கோபுர தரிசன நிகழ்வும், அதனைத் தொடர்ந்து கோபுர கும்பாபிஷேக நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இவ்விழாவிற்கு ஆலயத்தின் தலைவர் வே. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையேற்றார்.

ஆன்மிக அதிதிகளாக பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய பிரதம பூசகர் சிவத்திரு கி.வை. அருணன் மற்றும் பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயம், ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வசந்த டிமலேஸ்வரன் ஐயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும் சிறப்பு சொற்பொழிவாளராக ஆசிரியர் ஆலோசகர் M. லக்குணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் பாண்டிருப்புப் பகுதியின் அனைத்து ஆலயத் தலைவர்கள், ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய முன்னாள் பரிபாலன சபைத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந்த இறையருள் நிறைந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலய பரிபாலன சபையினர் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.