அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Donald Trump, “ஒப்பந்தத்தின் பெரும்பாலான அம்சங்கள் பேசி முடிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக 60 நாள் போர்நிறுத்தம், Hormuz நீரிணை மீள திறப்பு, ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு தளர்வுகள் மற்றும் அணு திட்டம் தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஈரானின் அணு வளம், பொருளாதார தடைகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இறுதி ஒப்பந்தத்திற்கு ஈரான் உயர்மட்ட பாதுகாப்பு சபையின் அங்கீகாரமும் தேவைப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்து முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும், இறுதி உடன்பாடு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.