பல தசாப்தங்களாக சிறப்பாக பாண்டிருப்பில் இயங்கிவரும் நவவித்தியா பாலர்பாடசாலையில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு நேற்று சிறப்பாக இடம் பெற்றது.

இதில் இங்கு கற்கும் பாலகர்கள் தமிழ் சிங்கள பாரம்பரிய உடை அணிந்து பங்குபற்றியதுடன் பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வை இப்பாடசாலையின் ஆசிரியர்கள் பிரேமகலா ,குவேணி, கஜனி ஆகியோர் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.

இப்பாடசாலையின் ஸ்தாபகர் அமரத்துவமடைந்த நிர்மலா ( வேவி) ரீச்சர் இப்பாலர் பாடசாலையை சிறப்பாக வழிநடத்தி வளாத்துள்ளார்.