காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் காட்டம் !

(வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஓர் அத்தியாயமான உயிர்த்த ஞாயிறு கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசிலாவது நீதி கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் காட்டமாக தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பின் ஏழாவது ஆண்டு நிறைவையொட்டி இன்று அவர் மேலும் தெரிவிக்கையில்.

ஈஷ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல் 21/04/2019 அன்று நடைபெற்றது.

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269,பேர் உயிரிழந்தனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.                                      

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள 03 தேவாலயங்கள் . மற்றும்

03 முன்னணி ஹோட்டல்களை இலக்கு வைத்து ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய உள்ளூர் பயங்கரவாதக் குழு இந்தத் தாக்குதலை நடத்தியது.

தாக்கப்பட்ட தேவாலயங்கள்:                    கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயம்,நீர்கொழும்பு புனித செபஸ்டியன் தேவாலயம்,                 மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்,       

தாக்கப்பட்ட ஹோட்டல்கள்:

கொழும்பிலுள்ள ஷாங்கிரி-லா,             சினமன் கிராண்ட்,                                  கிங்ஸ்பரி ஹோட்டல்கள்.

269 பேர் உயிரிழந்தனர் (44, வெளிநாட்டவர்கள், 03, காவல் துறை, ஏனையவர்கள் பொதுமக்கள்)

கொல்லப்பட்டவர்கள் விபரம்:

 இலங்கையர் 225, பேர்.

 இந்தியா 12, பேர்.

 சீனா 06,பேர்.ஐக்கிய இராச்சியம் 06,பேர்.

 டென்மார்க் 03,பேர்.

நெதர்லாந்து  03,பேர்.

அவுஷ்ரேலியா 02,பேர்.

சவூதி அரேபியா 02,பேர்.

எசுப்பானியா 02,பேர்.

துருக்கி 02, பேர்.

ஐக்கிய அமெரிக்கா 02, பேர்.

 வங்காளதேசம் 01 ஒருவர்.

ஜப்பான் 01 ஒருவர்.

போர்த்துகல் 01 ஒருவர்.

சுவிட்சர்லாந்து 01 ஒருவராக 

மொத்தம்:269, பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

உள்ளூர் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது.

இத்தாக்குதல்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத்என்ற உள்ளூர் அடிப்படைவாத இஷலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை அரசு அறிவித்தது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 14 சிறுவர்கள் உட்பட சுமார் 31 பேர் உயிரிழந்தனர்.80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

07, வருடங்களில் மைத்திரி, கோட்டா, ரணில், அநுரா நான்கு ஜனாதிபதிகள் ஆட்சியில் இருந்தும் இந்த தற்கொலைத்தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது இதுவரை கண்டுகொள்ளவில்லை..

இன்று-21/04/2026-ஏழாண்டு நினைவு தினம் நினைவு கூரப்பட்டுகிறது. ஆனால் நீதி கிடைக்கவில்லை.. என்றார்.