பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் “சாதகமாக பரிசீலித்து” வருவதாக ஈரானின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ப்பதற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நகர்வுகள் இந்தச் சாதகமான சூழலுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் காரணமாக பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கப் போவதாக ஈரான் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நிலைப்பாட்டில் தளர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
