எரிவாயுவின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு
லிட்ரோ 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு நான்காயித்து 765 ரூபாயாக இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதன் புதிய விலை, ஆயிரத்து 910 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 890 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கும் வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 1,070 ரூபாயால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய அதன் புதிய விலை 5,700 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 418 ரூபாயால் அதிகரித்துள்ளது.
இதன் புதிய விலை 2,280 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

