P.S.M

நோயாளர்களின் அதிகரிப்பு, சேவையின் விஸ்தரிப்பு காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் கையிருப்பு ஒரு இக்கட்டான நிலையை அடைந்து வருகின்றது.
இதன் இருப்பு நிலையை தக்க வைக்க வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் ஆலோசனையில், இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

“தானம் என்பது காலம் வரும்போது மனம் ஈந்து வழங்குவதாகும்”

இதற்கு அமைவாக நடமாடும் இரத்ததான முகாங்களும் நடைபெற்று வருகின்றது.

“இரத்ததான கொடையாளருக்கு ஒரு அரிய வாய்ப்பு”

தற்போதைய நிலையில் இரத்தக் கொடையாளர்கள், பொது அமைப்புக்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார். தினசரி காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையும் வைத்தியசாலையில் வழங்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மேலும் 20 பேருக்கு மேற்பட்ட ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களுக்கு நடமாடும் சேவையையும் ஒழுங்கு செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு விரைவாக கல்முனை ஆதாரவைத்திசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரியுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.