கல்முனை தமிழ் கோட்ட விளையாட்டு நிகழ்வு ஆரம்பமாகியது!

கல்முனை தமிழ் கோட்ட 14 பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட விளையாட்டு நிகழ்வுகள் இன்று 19.03.2026 கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் கோட்டக்கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து ஆரம்ப விழாவை சிறப்பித்தனர்.